Gold smuggled from Sharjah confiscated

Advertisment

சார்ஜாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த சிறப்பு விமானத்தில் பயணித்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நபர் கொண்டுவந்த கைப்பையை சோதனை செய்ததில், சுத்தியலில் வைத்து 200 கிராம் தங்கம் கடத்தி வரப்பட்டதை அறிந்து அவற்றைப் பறிமுதல்செய்தனர். இதன் மதிப்பு 94 லட்சம் ரூபாய்வரை இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.