Gold, silver and cash worth 17 lakhs were stolen from the farmer's house.

Advertisment

திருவண்ணாமலை அடுத்த துர்க்கை நம்மியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஆனந்தன். நேற்று இரவு குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றிருந்த நிலையில் ஆனந்தனின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 33 சவரன் தங்க நகைகள் 200 கிராம் வெள்ளி, ரொக்க பணம் 15 ஆயிரத்தை கொள்ளை அடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

இன்று காலை வீட்டிற்கு வந்த ஆனந்தன் முன்பக்க கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்த பொழுது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து பீரோவை பார்த்த பொழுது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 33 சவரன் தங்க நகைகள் மற்றும் 200 கிராம் வெள்ளி ரொக்க பணம் 15 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து திருவண்ணாமலை தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகைகளை பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.