'Gold' saw price rise the next day

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 1,320 ரூபாய் அதிரடியாகக் குறைந்திருந்தது. இதனால் ஒரு சவரன் தங்கத்தின் விலை 57,600 ரூபையாக இருந்தது. இதனால் 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 7,200 ஆகவும், ஒரு கிராம் வெள்ளியின் விலை மூன்று ரூபாய் குறைந்து 102 ரூபாயாகவும் விற்பனையானது.

Advertisment

கடந்த வாரங்களில் தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்தநிலையில் ஒரு சில தினங்களாகவே தங்கத்தின் விலை நேற்று குறைந்தது பரவலாக கவனிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில் தங்கத்தின் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தங்க விலை நேற்று குறைந்திருந்தது.

Advertisment

இந்நிலையில் நேற்று விலை குறைந்த அதே நேரத்தில் அடுத்த மறுநாளான இன்று (08/11/2024) தங்கம் விலை சவரனுக்கு 650 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஒரு சவரன் தங்க நகை 58,280 ரூபாய்க்கும் ஒரு கிராம் தங்கம் 7,285 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது.