Advertisment

பழநியில் கந்தவிலாஸ், சித்தநாதன் பஞ்சாமிர்த கடைகளில் 2.2 கோடி, தங்கம் பறிமுதல்!

திண்டுக்கல் மாவட்டம்பழனியில்கந்தவிலாஸ் மற்றும் சித்தநாதன் பஞ்சாமிர்த கடைகளில் கடந்த 29 ஆம்தேதி காலை முதல் பல நாட்களாகஇரண்டு கடைகளிலும் தலா 50க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்த நிலையில் இந்த சோதனையில் 2.2 கோடி ரூபாயும், 56.60 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கணக்கில் காட்டப்படாத 93.56 கோடி ரூபாய் வருவாய் ஏய்ப்பு செய்ததும்கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Gold, Rs 2.2 crore seized from Panchamritta stores

வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வந்த நிலையில் சோதனை முடிவில்2.2 கோடி ரூபாயும், 56.60 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.அந்த இரு நிறுவன கடைகளில் மட்டுமின்றிஉரிமையாளர்களின் குடோன், வீடு, தாங்கும் விடுதி,தோட்டத்து வீடுகளில்வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

it raid panjamirtham pazhani
இதையும் படியுங்கள்
Subscribe