Advertisment

அதிரடியாகக் குறைந்த தங்க விலை!

gold rates suddenly decreased peoples are happy

Advertisment

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரேநாளில் சவரனுக்கு ரூபாய் 1,464 குறைந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 1,464 குறைந்து, ரூபாய் 37,440 -க்கு விற்பனையாகிறது. அதேபோல் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 183 குறைந்து, ரூபாய் 4,680 -க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசுகள் குறைந்து, ரூபாய் 65.40- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டு மாதங்களில் சவரனுக்கு ரூபாய் 5,920 வரை குறைந்துள்ளது.கடந்த ஆகஸ்ட்டில் ஒரு சவரன் ரூபாய் 43,360 வரை உச்சம் சென்ற நிலையில் தற்போது விலை சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், ஒரேநாளில் ரூபாய் ஆயிரத்திற்கும் கீழ் விலை குறைந்திருப்பது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai gold and silver price rated gold rates
இதையும் படியுங்கள்
Subscribe