Gold prices skyrocket

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலையானது கடந்த சில வாரங்களாகவே மிகப்பெரிய அளவில் எந்த மாற்றங்களும் இல்லாமல் சற்று ஏறுவதும் சற்று குறைவதுமாக இருந்தது. இந்நிலையில் இன்று ஒரேநாளில் சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்துள்ளது.

Advertisment

இதனால் ஒரு கிராம் 6,75 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 6,825 ரூபாயாக இருக்கிறது. இதனால் ஒரு கிராம் தங்கத்தின் விலை 120 ரூபாய் அதிகரித்திருக்கிறது. ஒரு சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கத்தின் விலை 54 ஆயிரத்து 600 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல் வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் 91 ரூபாய் 50 பைசாவுக்கு விற்பனையான வெள்ளி விலை உயர்ந்து இன்று கிராம் 95 ரூபாயாக அதிகரித்துள்ளது.

Advertisment