gold

Advertisment

உக்ரைன் போர் சூழல் காரணமாக கடந்த மாதம் 24ஆம் தேதி தங்கத்தின் விலை உச்சத்தைத் தொட்டிருந்தது. கடந்த மாதம் 24 ஆம் தேதி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,856 ரூபாய் உயர்ந்து 39,608 ரூபாய்க்கு விற்பனை ஆனது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 232 ரூபாய் உயர்ந்து 4,951 ரூபாய்க்கு விற்பனை ஆனது. அதேபோல் சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து 72.70 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

அதன் பிறகு, தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்துவந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.392 உயர்ந்து 22 கேரட் தங்கம் ரூ. 40,840க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 5,105க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.60 காசுகள் உயர்ந்து ரூ.77.60க்கு விற்பனையாகிறது. கடந்த மாத இறுதிமுதல் தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்துவருவதால், ஓரிரு நாட்களில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 41,000ஐத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.