
உக்ரைன் போர் சூழல் காரணமாக கடந்த மாதம் 24 ஆம் தேதி தங்கத்தின் விலை உச்சத்தைத் தொட்டிருந்தது. கடந்த மாதம் 24 ஆம் தேதி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,856 ரூபாய் உயர்ந்து 39,608 ரூபாய்க்கு விற்பனை ஆனது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 232 ரூபாய் உயர்ந்து 4,951 ரூபாய்க்கு விற்பனை ஆனது. அதேபோல் சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து 72.70 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
அதற்கடுத்த இரண்டு நாட்களில் (26/2/2022) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 568 ரூபாய் குறைந்து 37,904 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 71 ரூபாய் குறைந்து 4,738 ரூபாய்க்கு விற்பனை ஆனது. அதேபோல் சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 69 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
இந்நிலையில் இன்றைய (5/3/2022) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 776 ரூபாய் அதிகரித்து 39,760 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 97 ரூபாய் குறைந்து 4,970 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 90 காசுகள் அதிகரித்து 73.40 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கடந்த மாதம் 24 ஆம் தேதி தங்க விலை 40 ஆயிரம் ரூபாயைநெருங்கியநிலையில் மீண்டும் தங்கத்தின் விலை 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow Us