Published on 12/11/2021 | Edited on 12/11/2021

திருச்சி விமான நிலையத்தில் தினந்தோறும் பல்வேறு நாடுகளிலிருந்து பன்னாட்டு விமானங்கள் இயங்கிவருகிறது. அந்தவகையில், மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் இரண்டு பயணிகள் பவுடர் டப்பாக்குள் மறைத்து துகள்கள் வடிவில் தங்கம் கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு பயணியிடமிருந்து 227 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மற்றொரு பயணியிடமிருந்து 234 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 469 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, இதன் மதிப்பு சுமார் 22 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் வரை இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.