Advertisment

தங்கம் ஆடம்பரமானது.. தண்ணீர் அவசியமானது.. அட்சய திருதியையில் அசத்தல் துண்டறிக்கை!

gold

Advertisment

அட்சய திருதியையில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்று தங்க நகை விற்பனையாளர்கள், நகை கடைகளல் கடந்த பல வருடங்களாக அள்ளிவிட்ட விளம்பரங்களைப் பார்த்து சாதாரண பொதுமக்கள் மட்டுமின்றி படித்து பதவிகளில் உள்ளவர்ளும் இன்று தங்க நகை வாங்க நகைக்கடை வாசலில் காத்திருக்கின்றனர். இன்று நகை வாங்கினால் இந்த வருடம் முழுவதும் தங்கம் பெருகும் என்பது அவர்களின் நம்பிக்கை.

gold

இந்த நிலையில் தான் புதுக்கோட்டையில் நகைக் கடைகள் அதிகமுள்ள கீழராஜா வீதி பகுதியில் திடீரென திரண்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சி இளைஞர்கள் நகை வாங்க நகை கடைகளுக்கு சென்ற பெண்களிடம் துண்டறிக்கை ஒன்றை கொடுத்து சிந்திக்க வைத்தனர். அந்த துண்டறிக்கையில் தங்கம் ஆடம்பரமானது.. தண்ணீர் அவசியமானது என்ற வாசகத்துடன் தொடங்கிய துண்டறிக்கையையுடன் ஒரு தண்ணீர் பாட்டிலையும் கொடுத்து அனுப்பினார்கள். தங்கம் வாங்கி சேமிக்க நினைக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் தண்ணீரையும் சேமிக்க வேண்டும் என்பதையும் வலியறுத்தினார்கள். இளைஞர்கள் கொடுத்த இந்த துண்டறிக்கை பொதுமக்களை சிந்திக்க வைத்தது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe