Advertisment

 தனியார் ஓட்டலில் நடைபெற்ற கண்காட்சியில் நகைகளை திருடிச்சென்ற கும்பல்

gold jewellery

கோவையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நகை கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சிக்கு நேற்று முன்தினம் மாலையில் டிப்-டாப் உடையணிந்த 4 பெண்கள் உள்பட 6 பேர் கும்பல் வந்தது. அவர்கள் அங்கு வைக்கப்பட்டு இருந்த நகைகளை பார்வையிட்டனர்.

Advertisment

அதில் ஒரு வாலிபர் மற்றும் 2 பெண்கள் அங்கிருந்த விற்பனையாளரிடம் நகைகளின் விலையை கேட்டு அதை வாங்கி பார்த்தனர். அந்த நகைகள் பிடித்து இருப்பதாகவும், சிறிது நேரம் கழித்து வந்து அவற்றை வாங்கி செல்வதாகவும் கூறிவிட்டு அவர்கள் 6 பேரும் வெளியே சென்று விட்டனர்.

Advertisment

இந்த நிலையில் அந்த அரங்கில் இருந்த விற்பனையாளர்கள் நகையை சரி பார்த்தபோது, அதில் 24 பவுன் நகையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நிறுவனத்தின் மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் அங்கு வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது, டிப்-டாப் உடை அணிந்து வந்த 6 பேர் கொண்ட கும்பலில் 3 பேர் விற்பனையாளரின் கவனத்தை திசைதிருப்புவதும், அதை பயன்படுத்தி மற்ற 3 பேரும் 24 பவுன் நகையை திருடும் காட்சியும் தெளிவாக பதிவாகி இருந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான 6 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

covai jewellery gold
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe