கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் நகரத்திலுள்ள பைந்தமிழ் தெருவில் வசிப்பவர் காவல் உதவி ஆய்வாளர் ராஜி. இவரது மனைவி ராணி தனது வீட்டின் முன்பு 6 1/2 பவுன் தங்கத் தாலி கிடப்பதைக் கண்டு எடுத்துள்ளார். பின்னர் அதனைத் தனது கணவரான காவல் உதவி ஆய்வாளரிடம் கொடுத்துள்ளார்.

Advertisment

உடனடியாக காவல் உதவி ஆய்வாளர் விருத்தாசலம் காவல் கண்காணிப்பாளர் இளங்கோவனிடம் இது குறித்து விசாரணை செய்ய வேண்டும் எனத் தங்கச் சங்கிலியை ஒப்படைத்தார். இச்செய்தி அறிந்த பைந்தமிழ் நகரைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் காவல் கண்காணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு, தங்கத் தாலி தனது மனைவியுடையது என்றும், தனது மனைவி வீரமணி மனம் நலம் பாதிக்கப்பட்டவர் எனவும் கூறியுள்ளார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், தங்கச் சங்கிலி பெரியசாமியுடையது என்பது தெரியவந்தது. பின்னர் காவல் துணைக் கண்காணிப்பாளர் இளங்கோவன் 6 1/2 பவுன் தங்கச் சங்கிலியை பெரியசாமியிடம் ஒப்படைத்தார். மேலும் சிறப்பாகப் பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளர் ராஜிக்கு, காவல்துறை கண்காணிப்பாளர் பொன்னாடை போர்த்திவாழ்த்துகளைத்தெரிவித்தார்.