திருச்சியில் பூட்டிய வீட்டில் இருந்த நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பிச்சாண்டவர் கோவில் பகுதியைச் சேர்ந்த இனிகோ என்பவரது மனைவி டெய்சி ராணி (வயது 42).இவர் திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது வெளியில் சென்றிருந்த அவரது கணவர்வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நான்கரைபவுன் நகை கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இனிகோகொள்ளிடம் போலீசாரிடம் தனது வீட்டில் இருந்த நகை கொள்ளையடிக்கப்பட்டது பற்றி புகார் அளித்தார். புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்புஏற்பட்டது.