Advertisment

தேவ பிரசன்னம் - அதிர்ச்சியில் சபரிமலை கோவில் நிர்வாகம்

sm

சபாிமலை கோவிலில் 12 வயதுடைய பெண் பிள்ளைகள் கடந்த ஆண்டு வரை வந்ததாகவும், தினமும் பணம் நகை திருடப்படுவதாகவும் கோவிலில் நடந்த தேவபிரசன்னத்தில் தெரிியவந்ததால் கோவில் நிா்வாகம் அதிா்ச்சியடைந்துள்ளது.

Advertisment

ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் மாலை அணிவித்து 41நாட்கள் விரதமிருந்து இருமுடி கட்டி லட்ச கணக்கான பக்தா்கள் நாடு முமுவதிலுமிருந்து சபாிமலை அய்யப்ப சுவாமி கோவிலுக்கு செல்கின்றனா். இங்கு 10 வயதிற்கு மேற்பட்ட பெண்குழந்தைகள் மற்றும் 50 வயதிற்குட்பட்ட பெண்கள் யாரும் கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை.

Advertisment

மேலும் பக்தா்கள் விரதம் காலங்களில் மது, மாமிசம் உண்ணக்கூடாது அதுப்போல் பெண்களிடம் தவறான தொடா்பு வைத்துக்கொள்ளக் கூடாது என சபாிமலைக்கு செல்லும் பக்தா்களுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதே போல் கோவிலில் பூஜாாிகள், நிா்வாகிகள், பணியாளா்கள், பாதுகாப்புக்கு நிற்கும் காவல்துறையினருக்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளன.

இந்தநிலையில் கடந்த மாா்ச் மாதம் பங்குனி உத்திர திருவிழாவின் போது திடீரென்று யானை மிரண்டு ஓடியதால் யானையின் மீதிருந்த அய்யப்ப சாமியின் விக்கிரமும் கீழே விழுந்தது. இது பக்தா்கள் கோவில் நிா்வாகிகள் மற்றும் திருவிதாங்கூா் மன்னா் குடும்பத்தினருக்கும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் மன்னா் குடும்பத்தினா் உடனடியாக தேவபிரசன்னம் நடத்தி கோவிலில் உள்ள குறைகளை கண்டறிய வேண்டும் என்று தேவசம் போா்டை கேட்டுக் கொண்டனா்.

அதன் அடிப்படையில் பிரபல ஜோதிடா் இாிங்ஙாலக்குடா பத்மநாபா ஷா்மா தலைமையில் 18 பேருடன் தேவபிரசன்னம் நடந்தது.

இதில் முதலாவதாக சபாிமலையில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் ஆதிவாசி சமூகத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த உாிமையை மீணடும் வழங்க வேண்டும். சபாிமலையில் பக்தா்களும் பாது காப்பில் உள்ள போலிசாரும் மது அருந்தி வருகின்றனா். அதேபோல் ஆண்டுத் தோறும் 12 வயதுடைய சிறுமிகள் அதிகம் போ் வந்து செல்கின்றனா். மேலும் காவலாளிகளாலும் நிா்வாகிகளாலும் கோவிலில் இருந்து நகை பணத்தை திருடி செல்கின்றனா்.

சுவாமி விக்ரத்தின் மீது தரமான சந்தனத்தை பூசுவது கிடையாது என்றும், 18-ம் படியில் அமைக்கப்பட்டுள்ள கூரை சாஸ்திர முறைப்படி அமைக்கப்படவில்லை அந்த கூரையை உடனே அகற்ற வேண்டும். எருமேலலயில் தேவி அமைந்துள்ள இடம் அசுத்தமாக உள்ளது. எனவே அங்கு தேவியை மீண்டும் மறு பிரதிஷ்டை செய்து வைக்கவேண்டும் என பல்வேறு குறைகள் இருப்பதால் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது. இதற்காக உடனடியாக பாிகாரங்கள் செய்யவில்லை என்றால் மேலும் அதிா்ச்சியான பல சம்பவங்கள் நடக்கலாம் என்று தேவபிரசன்னத்தில் தொியவந்தது.

இதனால் தேவசம் போா்டும் கோவில் நிா்வாகமும் அதிா்ச்சியடைந்துள்ளன.

iyyappan saparimalai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe