the goat

வெங்கட் பிரபு தற்போது விஜய்யை வைத்து இயக்கியுள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் விஜய் டி.ஏஜிங் தோற்றத்திலும், ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் மறைந்த விஜயகாந்த்தையும் நடிக்க வைத்துள்ளனர். மேலும் மறைந்த பாடகி பவதாரணியின் குரலை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் ஒரு பாடலுக்கு பயன்படுத்தி பாடவைத்துள்ளனர். இன்றுதிட்டமிட்டபடி படம் வெளியாகியுள்ளது. விஜய்யின் அரசியல் அறிவிப்புக்கு பின் வெளியாகும் முதல் திரைப்படம் என்பதால் விஜய் ரசிகர்கள் மற்றும் அக்கட்சியின் தொண்டர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் திரைப்படத்தைப் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் படம் பார்க்க வந்த ரசிகர் ஒருவர் படத்தை பார்த்துவிட்டு 'கண்டிப்பா ஜெயிப்பாரு ஜெயிப்பாரு' என உரக்க சத்தமிட்ட இளைஞர் 'ரெண்டு காலில் இல்ல தலைகீழா நிற்பாரு' என தெரிவித்து, திடீரென தலைகீழாக நின்று காலில் வணக்கம் வைத்தார். இது அங்கு கூடியிருந்த ரசிகர்கள் மற்றும் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.