Advertisment

ஆடு திருடர்களைப் பிடிக்க முயன்ற எஸ்.எஸ்.ஐ கொலை... கீரனூரில் பரபரப்பு!

 goat thieves Incident in pudukottai

ஆடு திருடர்களைப் பிடிக்க முயன்ற காவல் அதிகாரிகொலை செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன். இவர் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், வெட்டிக் கொலை செய்தது ஆடு திருடும் கும்பல் என்பது தெரியவந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஆடு திருடிய கும்பலை விரட்டி சென்ற போது எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

சனிக்கிழமை இரவுகளில் திருடப்படும் ஆடுகள் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு இடங்களில், சந்தைகளில் விற்கப்படுவதாக காவல்துறைக்கு வந்த தகவலையடுத்து போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இன்று அதிகாலை 2 மணியளவில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பூமிநாதன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆடுதிருடும் கும்பலை தனியாக இருசக்கர வாகனத்தில் விரட்டியுள்ளார். அப்பொழுது அந்த கும்பல் அவரை வெட்டி சாய்த்து உள்ளது அந்த கும்பல். இது குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருடர்களால் காவல் அதிகாரி பூமிநாதன் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த கொலை தொடர்பாக விசாரிக்க 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

goats police thiruchy Pudukottai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe