
ஆட்டோவில் வந்து தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்டு வந்த வேலூர் பகுதியை சேர்ந்த கணவன் மனைவி கைது. திருடிய ஆடுகளை சந்தையில் விற்க சென்றபோது கையும் களவுமாக பிடிபட்டனர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஜீவா நகர் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளில் பட்டியில் கட்டி வைக்கப்படும் ஆடுகளை பட்டியில் இருந்து தொடர்ந்து திருடு போவதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்து வந்தனர். இந்த நிலையில் போலீசார் ஜீவா நகர் பகுதியை சேர்ந்த பிரபு அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து ஆடு திருடர்களை தேடி வந்த நிலையில் அப்பகுதி மக்களே சந்தைகளில் ஒருபுறம் தேடும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் கே.வி குப்பம் சந்தையில் தங்களது ஆடுகளை விற்க முயன்ற கணவன் மனைவி இருவரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர் இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் வேலூர் அடுத்த அடுக்கம்பாறை பகுதியைச் சேர்ந்த சபரி மற்றும் அவரது மனைவி நிஷா என்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் ஆட்டோ மூலம் இது போன்ற ஊர் ஊராக சென்று நூதன முறையில் ஆடுகளை திருடி ஆட்டோவில் கொண்டு செல்வது தெரியவந்தது மேலும் அவர்களிடமிருந்த ஆறு ஆடுகளையும் ஆடு திருட பயன்படுத்தப்பட்ட ஆட்டோவையும் பறிமுதல் செய்து கணவன் மனைவி இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.