Advertisment

ஏசி வென்டிலேட்டர் மூலம் ஓட்டையை போட்டு ஆட்டை; பிரபல நகைக்கடையில் அதிர்ச்சி

Goat put a hole through the AC ventilator; A shock at a popular jewelry store

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 100 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கோவை காந்திபுரம் நூறடி ரோட்டில் உள்ள பிரபல நகைக்கடையில் ஏசி வென்டிலேட்டர் வழியே துளையிட்டு உள்ளே சென்ற மர்ம நபர் 100 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றதாக காவல்துறை தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கோவை மாநகர துணை காவல் ஆணையர் சண்முகம் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisment

முதல் கட்டமாக அந்த கடையில் பணியாற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கடைக்குள் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, நள்ளிரவு 1.30 மணிக்கு அடையாளம் தெரியாத நபர் கடைக்குள் நுழைந்து நகைகளை திருடியது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட கடையில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு நடத்தப்பட்ட ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 'ஒருவர் மட்டுமே உள்ளே புகுந்து நகைக்கடையில் கொள்ளை அடித்துள்ளது தெரியவந்துள்ளது. தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் கொள்ளையன் பிடிபடுவார்' என்று தெரிவித்தார்.

jewelry kovai police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe