Advertisment

GOAT மெஸ்ஸி - புகழாரம் சூட்டிய மு.க.ஸ்டாலின்

jh

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மெஸ்ஸி வழிநடத்தும் அர்ஜெண்டினா அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்று அசத்திய நிலையில், நேற்று இறுதி போட்டி நடைபெற்றது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் சாம்பியன் பட்டத்தை வென்றது அர்ஜெண்டினா. விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி சூட் அவுட்டில் வீழ்த்தியது.

Advertisment

அர்ஜெண்டினா,பிரான்ஸ் அணிகள் மூன்றுக்கு மூன்று (3-3)என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்ததால் பெனால்டி சூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. பெனால்டி சூட் அவுட்டில் (4-2) என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா வெற்றி பெற்றது. அர்ஜெண்டினா அணிக்காக மெஸ்ஸி 2, டி மரியா ஒரு கோல் அடித்தனர். 36 ஆண்டுகளுக்குப் பிறகு அர்ஜெண்டினா அணி மீண்டும் கோப்பையைக் கைப்பற்றியது.

Advertisment

இந்நிலையில் அர்ஜெண்டினா அணியை வெற்றியை உலகம் முழுவதும் கொண்டாடி வருகிறார். தமிழக முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றிபெற்ற அர்ஜெண்டினா அணிக்குவாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " கால்பந்து உலகக் கோப்பை வென்ற அர்ஜெண்டினா அணிக்கும், GOAT மெஸ்ஸிக்கும் வாழ்த்துக்கள். கோல் கீப்பர் மார்டினெஸ்க்கு சிறப்பு வாழ்த்துக்கள் " என்று பதிவிட்டுள்ளார்.

WorldCup argentina messi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe