goat

background:white">விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகில் உள்ளது கன்னரம்பட்டு. இந்த ஊரைச் சேர்ந்தவர் அய்யனார்.இவர் செம்மறி ஆடுகள் வளர்த்து அதன்மூலம் தன் குடும்பத்தையும் பிள்ளைகளையும் காப்பாற்றி வருகிறார். ஐம்பதுக்கும் குறையாத செம்மறி ஆடுகளை அப்பகுதியில் உள்ள காடு, கரைகளில் தினசரி மேய்த்த பிறகு தனதுஊருக்கு ஓட்டிச் சென்று இரவில் பட்டியில் அடைத்து விடுவார். மீண்டும் மறுநாள் காலை ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வது வழக்கம். நேற்றும் அதேபோல் அய்யனார் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார் கடந்த சில தினங்களாகவே அப்பகுதியில் மாலை நேரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. நேற்றும் அதேபோல் இடி மின்னலுடன் கடும் மழை பெய்துள்ளது. அப்போது பலமான இடி, மின்னல் தாக்கியதில் அய்யனாரின் 21 ஆடுகள் உயிரிழந்துள்ளன.

Advertisment

background:white">

background:white">இந்த ஆடுகளைக் கொண்டுதான் எங்கள் குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறேன். ஒட்டுமொத்த ஆடுகளில் 21 ஆடுகள் இறந்ததால், என்ன செய்வதென்று புரியாமல்தவிக்கிறேன். இந்த ஆடுகள் மூலம் எனது வருமானம் போய்விட்டது எனக் கண்ணீர் விட்டு அழுகிறார் அய்யனார். இடி, மின்னல்தாக்குதலில் அய்யனாரின்ஆடுகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

background:white">