/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_4533.jpg)
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளி, ஆண்டிபட்டிக் கோட்டை, ஈசநத்தம், மலைக்கோவிலூர் உள்ளிட்ட பள்ளிகளில் 364-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்குத்தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் அரவக்குறிச்சி திமுக சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ கலந்துகொண்டு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
பின்னர் மாணவர்களிடம் பேசிய எம்.எல்.ஏ. இளங்கோ, “பள்ளிக் கல்வித்துறை சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள், தமிழக அரசு சார்பில் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பள்ளிகளிலும் நூலகம் மேம்படுத்த வேண்டும், நூலகம் கட்டாயமாக இருக்க வேண்டும் என திட்டம் அறிவித்துள்ளார்கள். கலைஞர் நூற்றாண்டு விழாவைமுன்னிட்டு மதுரையில் பிரம்மாண்டமாக நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது 3 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் படிப்பதற்காக உருவாக்கித்தந்திருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். தலைமை ஆசிரியர், மாணவர்களை மதுரையில் கட்டப்பட்டுள்ள நூலகத்தை கண்டுகளிக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)