ADVERTISEMENT

பல் பிடுங்கிய விவகாரம்; வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

07:04 PM Apr 19, 2023 | kalaimohan

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்களின் பற்களைப் பிடுங்கி உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மற்றும் காவல்துறையினர் துன்புறுத்தியதாக சமூக ஊடகங்களில் வெளியான புகார்கள் குறித்தும் விரிவான விசாரணை மேற்கொள்ள அரசு முதன்மைச் செயலாளர் அமுதாவை உயர்மட்ட விசாரணை அதிகாரியாக நியமித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது.

ADVERTISEMENT

ஒரு மாதக் காலத்திற்குள் தமது விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும்படி அதில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அரசு முதன்மைச் செயலாளர் அமுதா விசாரணையைத் துவங்கியு நடத்திவருகிறார். நேற்று அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் அமுதா ஐ.ஏ.எஸ் ஆய்வு மேற்கொண்டார்.

ஏற்கனவே இந்திய தண்டனைச் சட்டம் 326-ல் பல்வீர் சிங் மீது குற்றப்பிரிவு போலீசார் சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆயுதத்தை பயன்படுத்தி கொடுங்காயம் ஏற்படுத்துதல், சித்திரவதை செய்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கான இந்திய தண்டனைச் சட்டத்தின் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வீர் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் விசாரணை அதிகாரி அமுதா ஐஏஎஸ்ஸின் பரிந்துரையை ஏற்று இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT