Advertisment

‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு - 2024’ - ஒரு பார்வை

'World Investors Summit - 2024' - An Overview

Advertisment

சென்னை வர்த்தக மையத்தில்இரண்டு நாட்கள் நடைபெறும் ‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024’ - ஐ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் இலக்கினை எட்டுவதற்கான செயல்திட்ட அறிக்கை, தமிழ்நாடு குறை கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணுக் கொள்கை 2024-ஐமுதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்த மாநாட்டில், செங்கல்பட்டில் அமையவுள்ள கோத்ரேஜ் தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.177 கோடியில் குவால்காம் நிறுவன வடிவமைப்பு மையத்தை தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டம் - பிள்ளைப்பாக்கம் சிப்காட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனத்தின் தயாரிப்பு தொழிற்சாலையை திறந்து வைத்தார். சென்னையில் அமைக்கப்பட்டுள்ள க்வால்காம் டிசைன் சென்டரை திறந்து வைத்தார். இதேபோன்று பல்வேறு நிறுவனங்களின் முடிவுற்ற பணிகளைத்தொடங்கி வைத்தும், முன்னணி பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டும் புதிய திட்டப் பணிகளுக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

மேலும் டாடா நிறுவனம் சார்பில் ரூ.12,800 கோடி முதலீடு செய்ய முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.10,000 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. வின்ஃபாஸ்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.16,000 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. கோத்ரேஜ் நிறுவனத்தின் உலகளாவிய விநியோக மையம் ரூ.515 கோடி முதலீட்டில் செங்கல்பட்டில் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பெகாட்ரான் இந்தியா பிரைவேட் லிமிடெட் ரூ.1,000 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிறுவனம் 8,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

'World Investors Summit - 2024' - An Overview

டிவிஎஸ் குழுமம் சார்பில் தமிழ்நாட்டில் வாகன உற்பத்தி, தகவல் தொழில்நுட்ப துறையில் கூடுதல் முதலீடுகள் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள பெகட்ரான் நிறுவனத்தின் மின்னணு உற்பத்தி தொழிற்சாலை விரிவாக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டில் கூடுதலாக ரூ. 6 ஆயிரம் கோடி முதலீடு செய்வதற்காகஹூண்டாய் நிறுவனத்துடனானபுரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. கும்மிடிப்பூண்டியில் அமைந்துள்ள மிட்சுபிஷி நிறுவனத்தின் குளிர்சாதன தயாரிப்பு தொழிற்சாலை விரிவாக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் மற்றும் மின்னணு பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலை விரிவாக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் கோத்ரெஜ் நிறுவனத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள ஒருங்கிணைந்த உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினர்.

invesment Agreement Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe