Advertisment

"ஜனாதிபதி, பிரதமரிடம் வாழ்த்து பெற்றது மகிழ்ச்சி" - ரஜினிகாந்த்!

Advertisment

டெல்லியில் விஞ்ஞான் பவனில் 25/10/2021 அன்று காலை 11.00 மணிக்கு 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களும் விருதுகளைப் பெற்றனர். திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்ததற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு 'தாதா சாகேப் பால்கே' விருது வழங்கப்பட்டது. இதற்கு முன்பு தமிழில் எல்.வி. பிரசாத், நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் கே. பாலச்சந்தர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட நிலையில், இம்முறை ரஜினிகாந்துக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

திரைத்துறையின் உயரிய விருதான 'தாதா சாகேப் பால்கே' விருதைப் பெற்ற நடிகர் ரஜினிகாந்துக்கு, பல்வேறு பிரபலங்களும் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், டெல்லியில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை தனது குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

Advertisment

இதுகுறித்து ரஜினிகாந்த் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மதிப்பிற்குரிய ஜனாதிபதி, பிரதமரைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றதில் பெரும் மகிழ்ச்சி" என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரைச் சந்தித்தபோது எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

chief minister Tamilnadu PM NARENDRA MODI
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe