Advertisment

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஜி.கே.வாசன், மத்தியில் ஆளும் பாஜக அரசும் கர்நாடக காங்கிரஸ் அரசும் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. இதற்கு தமிழக அரசும் நாடகம் ஆடி வருகிறது. காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்றார்.