Advertisment

ஜி.கே.மூப்பனார் சகோதரர் ஜி.ஆர்.மூப்பனார் சென்னையில் மறைவு: கும்பகோணம் அருகே நாளை நல்லடக்கம்

மறைந்த தலைவர் ஜி.கே.மூப்பானாரின் சகோதரரும், தமாகாவின் செயற்குழு உறுப்பினருமான ஜி.ஆர்.மூப்பனார் இன்று காலை 9 மணிக்கு சென்னையில் காலமானார். ஆழ்வார்பேட்டை அசோகா தெருவில் உள்ள அவரது இல்லத்தில் மாலை 6 மணி வரை அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். இதன் பின்னர் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள சொந்த ஊரான சுந்தரபெருமாள் கோயிலுக்கு உடல் எடுத்து செல்லப்பட்டு மூப்பனார் பங்களாவில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. நாளை மாலை 5 மணிக்கு மேல் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Advertisment

m

ஜி.ஆர். மூப்பனார் மறைவு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அதன் தலைவர் ஜி.கே.வாசனின் சித்தப்பாவுமான ஜி.ஆர். மூப்பனார் என்று அழைக்கப்பட்ட ஜி.ரங்கசாமி மூப்பனார் உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

Advertisment

மறைந்த தலைவர் ஜி.கே. மூப்பனாரின் இளைய சகோதரரான ஜி.ஆர். மூப்பனார் கல்வி, கலை, ஆன்மிகம் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். திருவையாறு ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபையின் தலைவராக இருந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். பாரதியார் பேரவையின் தலைவராக செயல்பட்டு பாரதியாரின் பெருமைகளை பரப்பி வந்தார். பார்க்கவ குல சங்கத்தின் மூத்த நிர்வாகிகளில் ஒருவராக இருந்து அச்சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்காக உண்மையாக பங்களித்து வந்தார்.

ஜி.ஆர். மூப்பனாரின் மறைவு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் இது பேரிழப்பு ஆகும். ஜி.ஆர். மூப்பனாரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

Kumbakonam Chennai grmooppanar gkmooppanar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe