Published on 12/03/2019 | Edited on 12/03/2019

கடந்த சட்டமன்ற தேர்தலில், கடைசி நேரத்தில் அதிமுகவுடன் கூட்டணி சேர முடியாமல், 26 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டது த.மா.கா. அதனால், தேர்தல் முடிவுகள் கசப்பான ஒரு அனுபவத்தை அக்கட்சிக்குத் தந்தது. இந்த முறையும், தொகுதி ஒதுக்கீட்டில் ஜி.கே.வாசன் கேட்ட எண்ணிக்கை அதிமுக தரப்பிலிருந்து கிடைக்கவில்லை. ‘த.மா.கா.வுக்கு ஒரு தொகுதிதான்’ என்பதில் உறுதியாக இருக்கும் அதிமுக, த.மா.கா., தங்கள் கூட்டணியில் இடம் பெறவேண்டும் என்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. அதனால், ஜி.கே.வாசனை தமிழக அமைச்சர்கள் இன்று நேரில் சந்தித்தனர். நாளை அதிமுக – த.மா.கா. இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும் என்கிறது ஆளும்கட்சி வட்டாரம்.