
தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆட்சிக்கு வந்த திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை எனவும், உடனடியாக வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகளின் நகை கடன், பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்யவேண்டும்.நெசவாளர்களுக்கு தனிக் கூட்டுறவு வங்கி அமைக்க வேண்டும். உப்பளத் தொழிலாளர்களுக்கு மழை, வெள்ளக் காலங்களில் நிவாரணத் தொகை 5,000 ரூபாயாக வழங்க வேண்டும். நீட் தேர்வில் இருந்து விலக்கு, இல்லத்தரசிகளுக்கு 1,000 ரூபாய் உரிமைத்தொகை, கேஸ் சிலிண்டருக்கான மானியம் 100 ரூபாய் வழங்குவது போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனக் கோஷங்களை ஏழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.