/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a2341.jpg)
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அரிட்டாபட்டி விவசாயிகளை எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அரிட்டாபட்டி விவசாயிகள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''டங்ஸ்டன் ஏல சுரங்கம் தொடர்பாக முதலமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதைத் தொடர்ந்து மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் 'எக்ஸ்' வலைத்தளத்தில் 'நாங்கள் (மத்திய அரசு)டெண்டர் அறிவித்ததிலிருந்து இறுதிச் செய்யும் வரை மாநில அரசிடம் இருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை. அதனால் இறுதி செய்கிறோம்' என்று வெளிப்படுத்தி விட்டது.
ஆக இந்த அரசாங்கம் உண்மையிலேயே மக்கள் பாதிக்கப்படக்கூடிய திட்டம் என்று கருதி இருந்தால் டெண்டர் விட்டவுடனே 9 மாத காலத்தில் உங்கள் உணர்வுகளை மத்திய அரசுக்கு தெரிவித்து இருந்தால் இந்த பிரச்சனையே வந்திருக்காது. இவ்வளவு கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை. யாருக்கோ உதவி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில்தான் ஒன்பது மாதம் காலத்தை தாழ்த்தினார்கள். ஆனால் நீங்கள் போராட்டத்தில் குதித்த காரணத்தினால் வேறு வழியில்லாமல் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார்கள். டெண்டர் விட்டது 2023 பிப்ரவரி மாதம். அப்பொழுது தனித்தே தீர்மானம் கொண்டு வந்திருக்கலாம். இப்பொழுது தான் கொண்டு வந்தார்கள். 2023 ஆம் ஆண்டு ஆறாவது மாதம் சட்டமன்றம் கூடுகிறது. பட்ஜெட் கூட்டம், மானிய கோரிக்கை நடைபெற்றது. அப்பொழுது ஏன் கொண்டு வரவில்லை? உண்மையிலேயே விவசாயிகள் பாதிக்கப்படுகின்ற திட்டம் என எண்ணி இருந்தால் 2023 ஆறாவது மாதம் சட்டமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது தீர்மானத்தை கொண்டு வந்திருக்க வேண்டும்.கொண்டு வரவில்லை. இதையெல்லாம் விவசாயிகள் சிந்திக்க வேண்டும். வேறு வழி இல்லாமல் உங்களுடைய அறவழிப் போராட்டம் இன்று வெற்றி பெற்றிருக்கிறது. அதன் வாயிலாக தான் மாநில, மத்திய அரசு இந்த சுரங்க ஏலத்தை ரத்து செய்து இருக்கிறது. நானும் உங்களுக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் கடுமையாக பேசினேன். என்னுடைய கேள்விக்கும் முறையான பதில் முதலமைச்சரிடம் இருந்து வராததால் நான் ஒரு வாக்கியத்தை சேர்த்தேன் 'என் உயிரைக் கொடுத்தாவது விவசாயிகளை காப்பாற்றுவேன்' என்று சொன்னேன். பிறகு தான் முதல்வர் என் பதவியே போனாலும் பரவாயில்லை நான் விடமாட்டேன் என்று சொன்னார்'' என்றார்.
Follow Us