/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a4022.jpg)
அண்மையில் எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் சிபிசிஎல் நிறுவனத்தின் எண்ணெய் கலந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பல நாட்களாக எண்ணெய்யை அகற்றும் பணி நடைபெற்று வந்தது. தொடர்ந்து எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு12,500 ரூபாய் நிவாரணமும், பாதிக்கப்பட்ட படகுகளுக்கு 10,000 ரூபாய் நிவாரணமும் அறிவித்திருந்தது.
எண்ணூர் மீனவர்களுக்கும் நிவாரணம் அறிவித்துள்ள நிலையில், திருவொற்றியூர் குப்பம், நல்ல தண்ணி ஓடை குப்பம், பெரிய குப்பம் உள்ளிட்ட மற்ற கடற்கரை பகுதியில் வசிக்கும் மக்களும் தாங்களும் கடலில் கலந்த எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மீனவப் பெண்கள் திருவெற்றியூர் பகுதியில் உள்ள எண்ணூர் விரைவு சாலையில் பதாகைகளுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதில் 'வஞ்சிக்காதே மீனவர்களை வஞ்சிக்காதே... நிவாரணம் கொடு...நிவாரணம் கொடு... சிபிசிஎல் நிர்வாகமே நிவாரணம் கொடு' என்ற பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். உயர் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையிலும் பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிடாமல் அதே இடத்தில் அமர்ந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதே திருவொற்றியூர் பகுதியில் இரண்டு மாநகர பேருந்துகளின்கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது. ஆனால் மனநலம் பாதித்த நபர் ஒருவரால் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)