Skip to main content

வீட்டுமனை கொடுங்க...இல்லையென்றால் கருணைக் கொலை செய்யுங்க !! திருநங்கைகள் ஆட்சியரிடம் மனு

Published on 27/06/2018 | Edited on 27/06/2018

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள திருநங்கைகளுக்கு வீடுகட்டி குடியிருக்க வீட்டுமனை கேட்டு பல ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர் அலுவகத்திற்கு வாரந்தோறும் திங்கள் கிழமை அலைந்து கொண்டிருக்கிறார்கள் திருநங்கைகள்.

 

petition

 

 

 

வழக்கம் போல இன்று மாவட்ட ஆட்சியர் அலுவகத்திற்கு மனுவோடு வந்த திருநங்கைகள் மனஉளைச்சலின் உச்சத்திற்கே சென்றுள்ளனர். 

 

புதுக்கோட்டை மாவட்ட திருநங்கைகள் சங்க தலைவர் ஹசீனா இன்று கொடுத்த மனுவில்.. 3 வருடமாக வீட்டுமனை கேட்டு பல முறை தங்களிடம் மனு கொடுத்தோம் நீங்கள் அறந்தாங்கி, குளத்தூர், திருமயம் தாலுகாகளுக்கு மனுவை அனுப்புகிறீர்கள் அங்கேயும் இடமில்லை என்று திருப்பி அனுப்புகிறார்கள். 

 

 

 

மாவட்டத்தில் எங்கு அரசு நிலம் உள்ளதோ அங்கே இடம் கொடுங்கள். அன்னவாசல் ஒன்றியம் அடப்பக்காரன்சத்திரம் கிராமத்தில் புறம்போக்கு நிலம் உள்ளத அங்கவாது  நாங்கள் பாதுகாப்பாக வாழ வழி செய்யுங்கள். இல்லை என்றால் அரசு குழந்தைகளான திருநங்கைகளான எங்களை கருணை கொலை செய்துவிடுங்கள் என்று விரக்த்தியின் உச்சமாக அந்த மனு எழுதப்பட்ட மனுவை கொடுத்தனர். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சாமி படத்திற்கு போட்ட அகல் விளக்கு; குடிசைகள் எரிந்து நாசம்

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Akal lamp for Sami photo; The huts were destroyed by fire

குடிசை வீட்டில் சாமி படத்திற்கு முன் ஏற்றப்பட்ட அகல் விளக்கிலிருந்து தீ பரவி 2 குடிசை வீடுகள் எரிந்து நாசமான சம்பவம் ஈரோட்டில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே காந்திபுரத்தில் இன்று நள்ளிரவில் 2 குடிசை வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து உடனடியாக நம்பியூர் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். எனினும் இந்த தீவிபத்தில் இரண்டு குடிசைகளும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.  

இதுகுறித்து நம்பியூர் போலீசார் விசாரணை நடத்தியதில் காந்திபுரம் மேடு பகுதியில், கண்ணையன் (65) என்பவர் தனது குடிசையில் சாமி படத்தின் முன்பு அகல் விளக்கில் தீபம் போட்டுள்ளார். அது காற்றின் வேகத்தால் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இவர் வீடு அருகே அங்கமுத்து (77) என்பவர் குடிசை வீடு உள்ளதால் இந்த தீ விபத்தில் அவர் வீடும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. தீ விபத்து நடந்த போது கண்ணையன் மற்றும் அங்கமுத்து ஆகியோர் அவரவர் வீட்டில் இருந்தனர். தீ விபத்து நடந்ததும் அவர்கள் குடிசையை விட்டு வெளியே வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். எனினும் இந்த விபத்தில் இருசக்கர வாகனம், தள்ளுவண்டி, துணிகள், மரக்கட்டில்கள், மிதிவண்டி ஆகிவையும் எரிந்து சேதமானது. இதுகுறித்து நம்பியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

‘3ஆம் பாலினத்தவர் உள் இடஒதுக்கீடு ரத்து’ - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 02/06/2024 | Edited on 02/06/2024
Court action order on Cancellation of seat reservation for 3rd gender

சென்னையைச் சேர்ந்தவர் திருநங்கை ரக்‌ஷிதா ராஜ். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலின் கீழ் 3ஆம் பாலினத்தவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கியது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது. எனவே அதை ரத்து செய்ய வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (02-06-24) சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவின் கீழ் உள் இட ஒதுக்கீடு வழங்கிய அரசாணையை ரத்து செய்வதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் மூலம், கடந்த 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.