Advertisment

''புற்றுநோய் மருத்துவமனைக்கு 20 ஆயிரம் கொடுங்க...''- ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு முன்ஜாமீன்!

publive-image

Advertisment

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்ற கடந்த ஜூலை 11 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓபிஎஸ் மட்டுமல்லாது அவரது ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் மீது 7 பிரிவுகளின் கீழ் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் இபிஎஸ் தரப்பினர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தனர். 64 பேர் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகவும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு 20,000 ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

highcourt police admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe