Advertisment

கள்ளக்காதலனை தீர்த்துக்கட்ட காதலி போட்ட திட்டம்: விசாரித்த போலீசாருக்கு கடும் அதிர்ச்சி

manjula

சென்னை எம்.ஜி.ஆர். நகர் நெசப்பாக்கம் பாரதிநகரைச் சேர்ந்த கார்த்திகேயன் மனைவி மஞ்சுளா. ரித்தேஸ்சாய் என்ற 10 வயது மகன் உள்ளான். மஞ்சுளாவுக்கு நாகராஜ் என்பவருடன் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இவர்கள் சந்திப்புக்கு ரித்தேஸ்சாய் வீட்டில் இருப்பதால் தாங்கள் இருவரும் சந்திக்க முடியவில்லை என்று நாகராஜும் மஞ்சுளாவும் என்ன செய்யலாம் என்று திட்டமிட்டு, ரித்தேஸ்சாயை டியூசன் சேர்க்க முடிவு செய்துள்ளனர். அதன்படி ரித்தேஸ்சாயை விஜயா டியூசனுக்கு சேர்த்துள்ளார்.

Advertisment

ரித்தேஸ்சாய்க்கு நாகராஜை அறிமுகப்படுத்திய விஜயா, இவர் நமக்கு தெரிந்தவர்தான் நல்லவர், இவர் உன்னை டியூசனுக்கு கொண்டுவிடுவார், பின்னர் அவரே உன்னை திரும்ப வீட்டுக்கு அழைத்து வருவார் என்று சொல்லியிருக்கிறார். இப்படியே இவர்கள் கள்ளக்காதல் தொடர்ந்து கொண்டிருக்க, ஒரு நாள் இவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்ததை ரித்தேஸ்சாய் பார்த்துவிட்டான். தனது தந்தையிடமும் சொல்லிவிட்டான்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

இதனை அறிந்தவுடன் கார்த்திகேயன் மஞ்சுளாவை கண்டித்ததோடு, நாகராஜை இனி இந்தப் பக்கம் வரக்கூடாது என்று எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாகராஜன், சிறுவன் ரிதேஷைக் சேலையூர் அருகே கடத்திச் சென்றுள்ளான். கடந்த பிப்ரவரி 28-ந் தேதி ரித்தேஸ்சாய் கொடூரமாக கொலை செய்யப்பட்டான். இந்த செய்தி தமிழகத்தையே உலுக்கியது.

சிறுவன் ரிதேஷைக் கடத்திச் சென்று சேலையூர் அருகே மது ஊற்றிக் கொடுத்து கம்பியால் கொடூரமாக நாகராஜ் அடித்துக் கொன்றது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து நாகராஜன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். இந்த நாகராஜன் விரைவில் ஜாமீனில் வெளி வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

nagaraj

இந்நிலையில் மஞ்சுளா, ஒரு பொருள் வாங்குவதற்காக பிரசாந்த், சுரேஷ் என்ற இருவரிடம் 5 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், அவர்கள் அந்தப் பொருளுக்கு பதிலாக பொம்மையைப் போல் ஒன்றைக் கொடுத்து ஏமாற்றி விட்டதாகவும், சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

அது என்ன பொருள் என போலீசார் விசாரித்தனர். அது பொம்மை போல இருக்குது சார் என்று மாறி மாறி பேசினார் மஞ்சுளா. போலீசார் அதிரடியாக துருவி துருவி விசாரித்த போது, துப்பாக்கி வாங்குவதற்காக தாம் பணம் கொடுத்ததாகவும், பொம்மைத் துப்பாக்கியை வாங்கிக் கொடுத்து அவர்கள் ஏமாற்றி விட்டதாகவும் மஞ்சுளா தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், தமது மகனை கொடூரமாக கொலை செய்த கள்ளக் காதலன் நாகராஜனை சுட்டுக் கொன்று பழிதீர்ப்பதற்காகவே துப்பாக்கி வாங்க மஞ்சுளா முயற்சி மேற்கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து, அனுமதியின்றி துப்பாக்கி வாங்க முயன்றதற்காக மஞ்சுளாவையும், துப்பாக்கி வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றியதற்காக பிரேம், சுரேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் வேறு ஏதும் மர்மங்கள் புதைந்துள்ளனவா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

girlfriend planned police Project shock
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe