Advertisment

பெட்ரோல் ஊற்றி எரித்த காதலி; சிகிச்சைப் பலனின்றி காதலன் உயிரிழப்பு!

Girlfriend who was burnt with petrol; Lover dies without treatment

Advertisment

மயிலாடுதுறையில் காதலனை காதலியே பெட்ரோல் ஊற்றி எரித்தசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த காதலன் உயிரிழந்தது மேலும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த ஒன்பதாம் தேதி சிந்துஜா-ஆகாஷ் என்ற காதல் ஜோடி இருசக்கர வாகனத்தில் பூம்புகார் கடற்கரைக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென சிந்துஜா கையில் வைத்திருந்த பெட்ரோலை காதலன் மீது ஊற்றியதோடு தன் மீதும் ஊற்றிக் கொண்டு தீ வைத்துள்ளார். இதில் தீக்காயத்துடன் மீட்கப்பட்ட ஆகாஷ் மற்றும் சிந்துஜா ஆகியோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவருக்கும் தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. ஆகாஷ் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 6 நாட்கள் நடைபெற்ற சிகிச்சைக்குப் பின்னர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தச்சம்பவத்தில் சிந்துஜா மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

nn

Advertisment

50 சதவிகித தீக்காயத்துடன் சிந்துஜா தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்சிகிச்சைப் பெற்று வருகிறார். முதற்கட்ட விசாரணையில் காதலன் ஆகாஷ் வேறொரு பெண்ணுடன் பழகியதால் ஆத்திரமடைந்த காதலிசிந்துஜா வீட்டுக்கு பெட்ரோல் வேண்டும் என வாட்டர் பாட்டிலில் பெட்ரோல் வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது பாதி வழியில் இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் காதலன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தது தெரியவந்துள்ளது.

fire police lovers Mayiladuthurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe