கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள வரம்பணுர்கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரதுமகள் சுகப்பிரியா (19) டிப்ளமோ நர்சிங் படித்துவிட்டுசென்னையில்உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சிங் பயிற்சி பணியில் ஈடுபட்டிருந்தார். இவருக்கும்விருத்தாசலம் அருகே உள்ள தீவலூர் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் மகன்அஜித்குமார் (23)இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.அஜித்குமார்சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். இவர்கள்இருவரும் சென்னையில் பணி செய்தாலும், ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் இருவரும் சென்னையில் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். மேலும் அஜித்குமாரின்சகோதரியை வரம்பனுரில்திருமணம் செய்து கொடுத்துள்ளனர். அவரைபார்க்க அடிக்கடி வரம்பணுருக்கு அஜித்குமார் வந்து சென்ற போது சுகப்பிரியவுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. பின் நாளிலஅது காதலாக வளர்ந்தது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து கடந்த 17 ஆம் தேதி சுகப்பிரியா விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊரான வரம்பணுருக்கு வந்துள்ளார். இதனிடையே சுகப்ரியாவின் காதல் விவகாரம் அவரது தாயார் சுசீலாவுக்கு தெரியவந்ததையடுத்து தனது மகளை அவர் கண்டித்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் (27.3.2022) சுகப்ரியா வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த அஜித்குமார்அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் காதல் விவகாரம் குறித்து தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின் சுகப்ரியாவின் வீட்டில் இருந்து அஜித்குமார் வெளியேறியுள்ளார். இதையடுத்து காதலர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனையில் மனமுடைந்த சுகப்பிரியா வீட்டில் தூக்கிட்டு கொண்டுள்ளார். அதன் பின்சத்தம் கேட்டு ஒடி வந்தஅக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சுகப்பிரியாவை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து தகவலறிந்த வேப்பூர் போலீசார் சுகப்பிரியாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மரணத்திற்கு அவரது காதல் பிரச்சனைதான் காரணமாஅல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அதன் பின் சுகப்பிரியாவைதற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலர்அஜீத் குமாரை கைது செய்துள்ளனர். காதல் பிரச்சனையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் வேப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.