காதலர்வீட்டிலேயே காதலி கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். கடந்த மாதம் சக்திவேல் வைத்திருந்த கார் ஒன்று காணாமல் காணாமல் போயுள்ளது. இந்நிலையில் சக்திவேல் வீட்டில்இல்லாத நேரத்தில் அவரது தாயார் கோவிந்தம்மாள் வீட்டில் இருக்கும்போது நான்கு மர்ம நபர்கள் திருடப்பட்ட காருக்கு இன்சூரன்ஸ் கட்டவில்லை எனவே உடனடியாக இன்சூரன்ஸ் தொகை கட்ட வேண்டும் என மிரட்டியுள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
இப்படி மர்ம நபர்கள் இன்சூரன்ஸ் ஏஜென்ட்கள் எனக்கூறி மிரட்டுவதாக சந்தேகமடைந்த சக்திவேலின் தாய் கோவிந்தம்மாள் தன் கணவனுக்கு போன் செய்து சொல்வதாகசொல்லி வீட்டிற்குள்சென்றுள்ளார். அப்போது அவரைபின் தொடர்ந்து சென்ற அந்த மர்ம நபர்கள் 4 பேரும் கோவிந்தம்மாளைகட்டிப்போட்டு வீட்டிலிருந்த 4 லட்சம் ரூபாயை கொள்ளையடித்தது சென்றனர். இப்படிகார்வீட்டில் வைத்திருந்த பணம் இப்படி தொடர்ச்சியாக வீட்டில் கொள்ளை போனது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
மேலும் அவர்களுக்கு தெரிந்தவர்கள்தான் இந்த கொள்கையை நடத்தி இருக்கவேண்டும் எனவும் சந்தேகம் ஏற்பட்டது. இதனை அடுத்து சக்திவேல் மற்றும் அவரது தாயார் கோவிந்தம்மாள் இருவரும் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரில் ஏதேனும் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு உள்ளதா என்று போலீசார் கேட்கையில் தன்னுடைய காதலிக்கும் தனக்கும் பிரச்சினை உள்ளது என கூறியுள்ளார் சக்திவேல்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
இதனை அடுத்து திருவான்மியூரைச் சேர்ந்த சரண்யா என்பவரை பிடித்து விசாரித்தனர் போலீசார்.அந்த விசாரணையில் தான் சக்திவேலை காதலித்து வந்ததாகவும் அவரைகாதலித்து வந்த நேரத்தில் இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் அதைக் கேட்ட பொழுது சக்திவேல் திரும்ப தர மறுத்துவிட்டார் எனவும் வாக்குமூலம் அளித்துள்ளார் சரண்யா.மேலும் இந்த பிரச்சனை காரணமாக அவரது காரையும் இன்ஷூரன்ஸ் ஏஜென்டுகள் என்ற பெயரில் 4 பேரை அனுப்பி அவரது வீட்டில் உள்ள பணத்தையும் கொள்ளையடித்தேன்எனவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து காதலன் வீட்டிலேயே கைவரிசை காட்டிய காதலியை போலீசார் கைது செய்துள்ளனர்.