Skip to main content

காதலன் வீட்டிலேயே கைவரிசை காட்டிய காதலி!!

Published on 28/11/2018 | Edited on 28/11/2018

காதலர் வீட்டிலேயே காதலி கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். கடந்த மாதம் சக்திவேல் வைத்திருந்த கார் ஒன்று காணாமல் காணாமல் போயுள்ளது. இந்நிலையில் சக்திவேல் வீட்டில்இல்லாத நேரத்தில் அவரது தாயார் கோவிந்தம்மாள் வீட்டில் இருக்கும்போது நான்கு மர்ம நபர்கள் திருடப்பட்ட காருக்கு இன்சூரன்ஸ் கட்டவில்லை எனவே உடனடியாக இன்சூரன்ஸ் தொகை கட்ட வேண்டும் என மிரட்டியுள்ளனர்.

 

Girlfriend  Theft in boyfriend house

 

இப்படி மர்ம நபர்கள் இன்சூரன்ஸ் ஏஜென்ட்கள் எனக்கூறி மிரட்டுவதாக சந்தேகமடைந்த சக்திவேலின் தாய் கோவிந்தம்மாள் தன் கணவனுக்கு போன் செய்து சொல்வதாக சொல்லி வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற அந்த மர்ம நபர்கள் 4 பேரும் கோவிந்தம்மாளை கட்டிப்போட்டு வீட்டிலிருந்த 4 லட்சம் ரூபாயை கொள்ளையடித்தது சென்றனர். இப்படி  கார் வீட்டில் வைத்திருந்த பணம் இப்படி தொடர்ச்சியாக வீட்டில் கொள்ளை போனது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

 

Girlfriend  Theft in boyfriend house

 

மேலும் அவர்களுக்கு தெரிந்தவர்கள்தான் இந்த கொள்கையை நடத்தி இருக்க  வேண்டும் எனவும் சந்தேகம் ஏற்பட்டது. இதனை அடுத்து சக்திவேல் மற்றும் அவரது தாயார் கோவிந்தம்மாள் இருவரும் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரில் ஏதேனும் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு உள்ளதா என்று போலீசார் கேட்கையில் தன்னுடைய காதலிக்கும் தனக்கும் பிரச்சினை உள்ளது என கூறியுள்ளார் சக்திவேல்.

 

Girlfriend  Theft in boyfriend house

 

இதனை அடுத்து திருவான்மியூரைச் சேர்ந்த சரண்யா என்பவரை பிடித்து விசாரித்தனர் போலீசார். அந்த விசாரணையில் தான் சக்திவேலை காதலித்து வந்ததாகவும் அவரை காதலித்து வந்த நேரத்தில் இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் அதைக் கேட்ட பொழுது சக்திவேல் திரும்ப தர மறுத்துவிட்டார் எனவும் வாக்குமூலம் அளித்துள்ளார் சரண்யா.  மேலும் இந்த பிரச்சனை காரணமாக அவரது காரையும் இன்ஷூரன்ஸ் ஏஜென்டுகள் என்ற பெயரில் 4 பேரை அனுப்பி அவரது வீட்டில் உள்ள பணத்தையும் கொள்ளையடித்தேன் எனவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து காதலன் வீட்டிலேயே கைவரிசை காட்டிய காதலியை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

அதிமுக பிரமுகர் வீட்டில் அரங்கேறிய சம்பவம்; தாய், தந்தை, மகன் கைது!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
 mother, father and son, were arrested robbery of AIADMK official  house

திருவண்ணாமலை குபேர மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் அதிமுக பிரமுகர் முருகன். முன்னாள் எம்.ஜி.ஆர் மன்ற நகரப் பொருளாளராக இருந்தார். தன்னுடைய குடும்பத்தினருடன் திருமணத்திற்காக வெளியூர் சென்ற நிலையில், மூன்று நாட்களுக்குப் பிறகு கடந்த வாரம் 28ம் தேதி திருவண்ணாமலைக்கு திரும்பினார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 35 சவரன் தங்க நகைகள், 5 லட்சம் ரூபாய் ரொக்கம், வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி ஆகியவற்றைத் திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முருகன், இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் தலைமையில் 10 பேர் கொண்ட இரண்டு தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

அதிமுக பிரமுகர் முருகன் வீட்டில் கொள்ளையடித்ததாக தந்தை சிவா, தாய் அமுதா, இவர்களின் மகன் ரஞ்சித்குமார் மற்றும் ரஞ்சித்குமார் நண்பர் ஸ்ரீராம் ஆகிய நான்கு பேரையும் தனிப்படை போலீசார் மார்ச் 5 ஆம் தேதி கைது செய்து கிராமிய காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

கொள்ளையடித்த நகைகளில் சுமார் 20 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு எல்.இ.டி. டிவியை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர். குறிப்பாக ரஞ்சித்குமார் மற்றும் ஸ்ரீராம் இருவரும் இருசக்கர வாகனத் திருட்டில் கைதாகி சிறைக்குச் சென்று தற்போது வீடுகளில் கொள்ளையடிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், குறிப்பாக இவர்களுக்கு ரஞ்சித்குமாரின் தாய், தந்தையர் உதவியாக உள்ளனர் எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் ஸ்ரீராம் என்பவரின் கைரேகை மற்றும் அவரின் சமூக வலைத்தள பக்கங்களைக் கொண்டு அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து அவர்களை வேலூர் சாலையில் உள்ள தீபம் நகரில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்ததாகத் தெரிவித்தனர்.