Advertisment

காதலனை இரவில் வீட்டிற்கு வரச்சொன்ன காதலி! உறவினர்களுடன் சேர்ந்து அடித்துக்கொன்ற தந்தை!

nm

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் மைனர் பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் நள்ளிரவில் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இக்கொலையில் சம்பந்தப்பட்ட பெண்ணின் தந்தை மற்றும் தாய் மாமன்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisment

பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது 17 வயது மகளை மோர் பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தர்மராஜ் 27 என்பவர் கடந்த 2 வருடமாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் பெண்ணின் தந்தையான முத்துக்குமாருக்கு தெரிய வர மகளை கண்டித்துள்ளார். ஆனால் கண்டிப்பையும் மீறி தர்மராஜனும் முத்துக்குமார் மகளும் சந்தித்து வந்துள்ளனர். சென்ற வாரம் தர்மராஜ் தனது காதலிக்கு புதிய செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். அந்த செல்போனில் இருவரும் உரையாடிக் கொண்டிருந்தது பெண்ணின் தந்தைக்கு தெரிந்தது. இதன்காரணமாக ஆத்திரமடைந்த முத்துக்குமார் தனது மகளிடம் இருந்த செல்போனை பறித்து வைத்துக் கொண்டார்.

Advertisment

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தர்மராஜ் செல்போனில் அப்பெண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார். அப்போது முத்துக்குமார் தனது மகளிடம் தர்மராஜை நேரில் நள்ளிரவில் வந்து சந்திக்குமாறு மகளிடம் சொல்லச் சொல்லியுள்ளார். அந்தப் பெண்ணும் அப்படியே கூறியுள்ளார். இதை நம்பிய தர்மராஜ் தனது காதலியை சந்திப்பதற்காக நள்ளிரவில் அப்பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு மறைந்திருந்த முத்துக்குமாரும் அவரது மைத்துனர்கள் சக்திவேல், ரமேஷ் மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி, ரங்க நாதன் ஆகியோர் தர்மராஜை மரக்கட்டையால் அடித்துள்ளனர். இதில் மயக்கமடைந்த தர்மராஜ் அங்கிருந்த காட்டிற்குள் சென்று விட்டார். மீண்டும் காலையில் பார்த்தபோது தர்மராஜ் மயக்க நிலையில் கிடந்துள்ளார். பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். மருத்துவர்கள் பரிசோதித்தபோது தர்மராஜ் இறந்தது தெரிய வந்துள்ளது. இதனால் பயந்துகொண்டு ஐந்து பேரும் தலைமறைவாகிவிட்டனர் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் 5 பேரையும் இன்று காலையில் போலீசார் கைது செய்தனர்.

namakkal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe