Advertisment

காதலனுக்கு வீடியோ அனுப்பிவிட்டு காதலி விஷமருந்தி தற்கொலை..! 

Girlfriend commits suicide by sending video to boyfriend ..!

கடலூர் மாவட்டம், ராமநத்தம் அருகில் உள்ளது பெரங்கியம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த வீரமுத்து என்பவரது மகள் பீலாமேரி (22). இவர், திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. நான்காம் ஆண்டு படித்துவருகிறார். இவரும் அதே ஊரைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் மங்கலேஸ் (22) என்பவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்துவந்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக காதலர் மங்கலேஸ், காதலி பீலாமேரியிடம் நெருங்கி பேசுவதைத்தவிர்த்து வந்துள்ளார். பீலாமேரி பலமுறை காதலனிடம் தனிமையில் சந்தித்துப் பேச முயற்சி செய்தும் அவர் அதை தவிர்த்துவந்துள்ளார். இதனால் மிகவும் சோகத்துடன் காணப்பட்ட பீலாமேரி, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கடும் முயற்சி செய்து காதலர் மங்கலேஸை நேரில் சென்று தனிமையில் சந்தித்துள்ளார்.

Advertisment

அப்போது, “ஏன் என்னை சந்தித்துப் பேச மறுக்கிறீர்கள்? என்ன காரணம்?” என்று பீலா மேரி காதலனிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தன்னிடம் பேசாததற்கு என்ன காரணம் என்பதைக் கூறாமலேயே காதலன் வேகமாக அங்கிருந்து சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த காதலி பீலாமேரி, ஏற்கனவே தயாராக வாங்கி வைத்திருந்த விஷத்தை எடுத்து சாப்பிட்டுள்ளார். அதை சாப்பிடுவதற்கு முன்பு காதலின் பெயரைக் குறிப்பிட்டு, தான் விஷம் குடித்து சாகப்போகிறேன். என்னிடம் காதலன் மங்கலேஸ் பேசாத வருத்தம்தான் இதற்கு காரணம் என்று வீடியோவில் பேசி, அதைக் காதலனுக்கு அனுப்பிவிட்டு விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார்.

இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், அவரை உடனடியாக மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் பீலாமேரி உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரின் தந்தை வீரமுத்து அளித்த புகாரின் பேரில், ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிவுசெய்துபீலாமேரியின்காதலர் மங்கலேஸை கைது செய்துள்ளனர். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Cuddalore police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe