Skip to main content

திரூவாரூர் கரோனா வார்டில் சிகிச்சையில் இருந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை...

Published on 22/06/2020 | Edited on 22/06/2020
The girl who was undergoing treatment in the Thiruvarur corona ward was a male child

 

திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்ததுள்ளது. சென்னை உள்ளிட்ட வெளிமாநில, வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களாளேயே கரோனா தொற்று அதிகரிப்பதாக பொதுமக்கள் வேதனை கொள்கின்றனர்.

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் நோய் தொற்றின் தாக்கம் அதிகரிப்பதால் அங்கு வேலைக்குச் சென்றவர்கள் அனைவரும் அரசுக்கு தெரிந்தும், தெரியாமலும் தற்போது சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். அப்படி வருபவர்களில் பலருக்கும் நோய் தொற்று இருப்பதால் அவர்கள் மூலமாக மற்றவர்களுக்கும் நோய் பரவுவது அதிகரித்துள்ளது. அதனால் கிராமங்களில் நோய்தொற்று சற்று வேகமெடுக்கவே செய்துள்ளது. வெளியூர்களிலிருந்து வருபவர்கள் மூலமாக அவர்களுடைய குடும்பத்தினரோடு மட்டுமின்றி, அந்த கிராமமே பாதிக்கப்படுகிறது.

அந்தவகையில்  திருவாரூர் மாவட்டத்திற்கு வெளியூர்களில் இருந்து வருபவர்களை இனம் கண்டு அவர்களுக்கு கரோனா பாதிப்பு இருக்கிறதா என கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் ஒட்டுமொத்தமாக திருவாரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது. இதில் 108 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் திருவாரூர் அருகே வடகண்டம் பகுதியை சேர்ந்த இரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று வந்த நிலையில், அவருக்கு கரோனா உறுதியானது. அவரை திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறார். அதேபோல திருவாரூர் மாவட்டம் காரைக்கோட்டை பகுதியை சேர்ந்த 32 வயது பெண் மற்றும் அவருடைய மூன்று மாத ஆண் குழந்தைக்கும் கரோனா தொற்று உறுதியானது. இருவரும் சென்னை சென்று வந்ததால் நோய்தொற்று உறுதியாகியுள்ளது. திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த 14 வயது சிறுமி சென்னை சென்று வந்துள்ளார். அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர் அவருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் இன்று ஒரே நாளில் 12 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்கள் அனைவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் திருவாரூர் அருகே உள்ள திருநெய்ப்பர் கிராமத்தை சேர்ந்த கர்பிணி பெண் ஒருவருக்கு, எதிர்வீட்டில் இருந்தவர்கள் மூலம் கரோனா பரவியது. அவரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை அளித்து வந்தனர். தற்போது அவருக்கு சுகப்பிரசவமாக ஆண்குழந்தை பிறந்துள்ளது. தாய்க்கும், சேய்க்கும் தனி தனியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் ஆயுதங்கள்; 4 பேர் கைது

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
BJP district executive's car; 4 arrested

திருவாரூரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது சொகுசு காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆயுதங்கள் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.