uyir

Advertisment

திருபுவனத்தில் இறந்து எரிக்கப்பட்ட பெண் உயிருடன் மன நலம் பாதிக்கப்பட்டவராக வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். அவரது மனைவி ஆஷா. இவர்களுக்கு இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டு 13 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 25ம் தேதி அடையாளம் தெரியாத வாகனம் மோதி 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அடிபட்டு கிடந்ததை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆம்புலஸ் வரவழைத்து அருகில் உள்ள திருவிடைமருதூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

Advertisment

அங்கு இரண்டு நாள் சிகிச்சைக்கு பிறகு சிகிச்சை பலனின்றி 27 ம் தேதி இறந்து போனார், இறந்த பெண்ணின் பெயர் ஆஷா என்றும் அவரது கணவர் பெயர் ராமச்சந்திரன் என்றும், ஆஷா மன நலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்தார் என்றும் போலிசாரும். மருத்துவர்களும் பதிவு செய்திருந்தனர்.

இறந்த பெண்ணின் உடலை உடற்கூறாய்வு செய்து விட்டு, ராமச்சந்திரனுக்கு தகவல் அனுப்பினர். அவரோ எனக்கும் அவளுக்கும் தொடர்பில்லை 13 வருடத்திற்கு முன்னாடியே என்னை விட்டு பிரிஞ்சிட்டா என மறுத்து விட்டார். பிறகு போலிசாரின் நீண்ட நேர வனப்புறுத்தலுக்கு பிறகு உடலை வாங்க சம்மதித்தார்.

வேறு வழியில்லாமல் ராமச்சந்திரன் கையோப்பமிட்டு முகத்தைக் கூட பார்க்காமல் மயானத்தில் வைத்து எரித்து விட்டார்.

Advertisment

இந்த சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்து ஆஷா இன்று திருபுவனம் கடைவீதியில் உட்கார்ந்திருப்பதை கண்டு பலரும் ஆச்சர்யபட்டு விட்டனர். எரிக்கப்பட்டதாக கூறிய ஆஷா இங்க இருக்க எரிந்த உடல் யாருடையது என பெரும் பரபரப்பு உறுவாகியுள்ளது.