கடலூர் மாவட்டம், மீரானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கவி(21) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருச்சி பி.கே. அகரம் அருகில் உள்ள நாலந்தா வேளாண் கல்லூரியில் 3ஆம் ஆண்டு வேளாண்மை படித்து வருகிறார். இவர் விடுமுறைக்கு தன்னுடைய சொந்த ஊரான கடலூர் மாவட்டம், மீரானூருக்கு செல்வதாக கூறிவிட்டு கல்லூரியில் இருந்து சென்றுள்ளார்.
அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து கவியின் தந்தை கொளஞ்சியப்பன், சிறுகனூர் காவல்நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் கொடுத்துள்ளார். மேலும், அந்தப் புகாரில் கடலூர் மாவட்டம் எழுமேடு பகுதியைச் சேர்ந்த வேதவியாசர் என்ற இளைஞர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.