/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_1680.jpg)
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகில் உள்ள சொரத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகநாதன். இவரது மனைவி காவியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு இரண்டு பிள்ளைகளை உள்ளனர். இவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் தனது இரண்டு பிள்ளைகளுடன் தனியாக வசித்து வருகிறார். கூலி வேலை செய்து தன் பிள்ளைகளை காப்பாற்றி வரும் காவியாவுக்கு அதே ஊரைச் சேர்ந்த சுதாகர் என்பவரது மனைவி கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நெருக்கமான தோழி.
காவியா, தனது தோழி கீதாவைப் பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு அவ்வப்போது சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் கணவர் இல்லாத காவியாவை எப்படியும் தன் வலையில் விழ வைத்துவிட வேண்டும் என்று கீதாவிற்கு தெரியாமல் அவரது கணவர் சுதாகர் முயற்சி செய்துள்ளார். நேற்று முன்தினம் காவியாவை தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார் சுதாகர்.
அப்போது காவியா, “கீதா எனது தோழி எங்களுக்குள் இருக்கும் நட்பை நீங்கள் சிதைக்க வேண்டாம். தயவுசெய்து இதுபோன்ற தவறான எண்ணத்துடன் என்னிடம் பேச வேண்டாம். ப்ளீஸ் நெருங்க வேண்டாம்” என்று மன்றாடி உள்ளார் காவியா. அதையும் மீறி தன் ஆசைக்கு இணங்குமாறு சுதாகர் காவியாவின் கையை பிடித்து ஆசைக்கு இணங்குமாறு கட்டாயப்படுத்தி இழுத்துள்ளார். இதற்கு காவியா மறுக்கவே அவரை அடித்து கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதையடுத்து அவரிடம் இருந்து தப்பி வந்த காவியா, முத்தாண்டிகுப்பம் காவல் நிலையத்தில் சுதாகர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சுதாகரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)