Advertisment

கண்டிப்பு என்ற பெயரில் சிறுமியை சாகடித்த தாய் மற்றும் உறவினர்!

the girl tortured by mother and relative

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் 10 வயது மகாலட்சுமி அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் சிறுமி மகாலட்சுமி தங்கள் பக்கத்து உறவினர் வீட்டில் 70 ரூபாய் பணத்தை திருடி தின்பண்டங்கள் வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

Advertisment

இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட சிறுமியின் தாய் மணிமேகலை அவரது உறவினர் மல்லிகா ஆகிய இருவரும் சேர்ந்து சிறுமியின் வாய் மற்றும் கால் தொடைகளில் சூடு வைத்தும் மிளகாயை நறுக்கிப்போட்டு அந்தப் புகையை சிறுமியின் முகத்தில் பிடிக்க மூச்சுத்திணறச் செய்து சித்ரவதை செய்துள்ளனர். இதனால் சிறுமியின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.

Advertisment

இதையடுத்து அவர்கள் அந்த சிறுமியை அவரது ஊருக்கு அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் அரசு சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் சிறுமி நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இது குறித்து அரும்பாவூர் போலீசார் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தாய் மணிமேகலை அவரது உறவினர் மல்லிகா ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

child Perambalur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe