Advertisment

அசால்டாக பள்ளி முட்டைகளைக் கடத்தும் பெண் - வைரலாகும் வீடியோ

'Girl theft School Eggs' - Video Goes Viral

Advertisment

சத்துணவு ஊழியரின் அனுமதியுடன் பள்ளியிலிருந்து பள்ளியின் சத்துணவு மையத்திலிருந்து பெண் ஒருவர் மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டைகளை பாத்திரங்களில் கடத்திச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மாத்தூர் அருகே உள்ள அரசுப் பள்ளிமாணவர்களுக்காக வழங்கப்படும் முட்டைகளை சத்துணவு ஊழியர்களின் உதவியுடன் பெண் ஒருவர் எடுத்துச் சென்றார். இரண்டு பாத்திரங்களில் மேல் உள்ள பாத்திரத்தில் சாப்பாடு இருந்தது. கீழ் பாத்திரத்தில் முட்டைகள் இருந்தது. இதனை அறிந்த நபர் ஒருவர் பாத்திரத்தைக் காட்டச் சொல்லி வீடியோ எடுத்தார். ''இதில் என்ன சேர்த்தாதீங்க நான் சோறு வாங்க மட்டும்தான் வந்தேன்' என அப்பெண் சொல்ல, மேலே சாப்பாடு இருந்து பாத்திரத்தை எடுத்துவிட்டுப் பார்த்தபோது கீழுள்ள பாத்திரத்தில் முட்டைகள் இருந்தது. முட்டைகளில் தமிழக அரசின் சீல் இடம் பெற்றிருந்தது. முட்டைகளை இவ்வாறு எடுத்துச் செல்ல யார் அனுமதியளித்தது எனக் கேள்வி எழுப்ப, அப்பெண் அருகிலிருந்த சத்துணவு ஊழியரை கை காட்டினார். அவரிடம் அந்த நபர் கேள்வி எழுப்பத்தொடங்கினார். ஆனால் அதற்கு அவர் பதில் அளிக்காமல் அங்கிருந்து நகர்ந்தார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

eggs tngovt
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe