/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/A3873.jpg)
சிவகங்கையில் முதியவர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் ஆவின் பாலகம் நடத்தி வந்த முதியவர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்எழுந்தநிலையில் அந்தப் பகுதி மக்கள் மற்றும் சிறுமியின் உறவினர்கள் முதியவரை தாக்கியதோடு சம்பந்தப்பட்ட ஆவின் பால் கடையையும் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து புகார் எழுந்த நிலையில் சிறுவர் நலத்துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதியவர் மீது மானாமதுரை மகளிர் காவல் நிலையத்தில்கொடுக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில்வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட முதியவர் தப்பியோடிய நிலையில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)