Advertisment

சிறுமி கர்ப்பமான விவகாரம்: சம்பந்தப்பட்ட இளைஞர்களை கைது செய்த போலீஸ்! 

Girl pregnant affair: Police arrest youths involved

திருச்சி மாவட்டம் முசிறியில் 14 வயது சிறுமி கர்ப்பமான வழக்கில் வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒரு வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் முசிறியில் தந்தையை இழந்த சிறுமி 7 மாத கர்ப்பிணியாக இருப்பதாக சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர்களுக்கு தகவல் சென்றது.

Advertisment

இதையடுத்து முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் காவிரியிடம் சமூக நல ஆர்வலர்கள் புகார் செய்தனர். இதையடுத்து சிறுமியின் இருப்பிடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் சமூக நல அலுவலர்கள் சிறுமியின் தாய் மற்றும் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமி 7 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

Advertisment

விசாரணையில் முசிறி பகுதியை சேர்ந்த ரத்தினவேல் (21), தொட்டியம் தாலுகாவை சேர்ந்த 16 வயதுசிறுவன் மற்றும் துலையாநத்தம் கிராமத்தை சேர்ந்த பாபு (21) உள்ளிட்டோர் சிறுமியிடம் அத்துமீறி நடந்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து வாலிபர் ரத்தினவேல் மற்றும் 16 வயது சிறுவன் உள்ளிட்ட இருவரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். சம்பவத்தில் மேலும் தொடர்புடைய பாபு என்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். கர்ப்பிணியாக இருக்கும் சிறுமி முசிறி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

musiri police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe