Advertisment

பிளஸ்2 மாணவி கர்ப்பம்; 17 வயது இளைஞர் மீது போக்சோ வழக்கு!        

girl pregnant for 17th year old boy

சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ்2 படித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாள்களாக திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து பெற்றோர், அந்தச் சிறுமியை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதனையில், அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

Advertisment

இதையறிந்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மகளிடம் விசாரித்தபோது, களரம்பட்டி அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சூர்யா (19)என்ற இளைஞரை காதலித்து வந்ததாகவும், அவருடன் நெருங்கிப் பழகியதால் தான் கர்ப்பம் அடைந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சேலம் நகர மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் சூர்யா மீது போக்சோசட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைத்தேடி வருகின்றனர்.

Advertisment

Pregnant Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe