Advertisment

பெண் தற்கொலை! ஆர்.டி.ஓ. விசாரணை! 

Girl passed away R.D.O. Investigation!

Advertisment

திருச்சி மாவட்டம், லால்குடி பகவதியம்மன் கோவில் தெரு காட்டுர் பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா. இவருக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தினேஷ்குமார் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒருமகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

சரண்யா, கடந்த 3 வருடங்களாக கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். மேலும் கடந்த 3 மாத காலமாக தீராத வயிற்றுவலி காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று சரண்யாவின் கணவர் கணேசன் திருமண நிகழ்விற்காக மதுரைக்கு சென்றிருந்த சமயத்தில் அன்று மதியம் 2.45 மணிக்கு சரண்யா தூக்குப் போட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த லால்குடி காவல்துறையினர், வீட்டிற்குள் நுழைந்து பார்த்தபோது அவருடைய மகன் இறந்து கட்டிலில் கிடந்துள்ளார். சரண்யா தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe