Girl passed away due to lack of treatment

திருச்சியை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவருக்கு உடல் பருமனாக இருந்ததால் உடல் எடையை குறைக்க பல்வேறு சிகிச்சை முறைகளை பின்பற்றி வந்துள்ளார். இதில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் மன உளைச்சலுக்கு ஆளானவர் நேற்று மதியம் வீட்டில் சாப்பிட்டுவிட்டு தன்னுடைய அறைக்கு சென்றவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Advertisment

அக்கம்பக்கத்தினர் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அச்சிறுமி தூக்கில் தொங்கி உள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கண்ட்டோன்மென்ட் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதன் முதல்கட்ட விசாரணையில் அந்தப் பெண் அதிக உடல் வளர்ச்சி பருமன் ஏற்பட்டு தொடர்ந்து பல்வேறு சிகிச்சை முறைகளை பின்பற்றியுள்ளார்.

Advertisment

அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாதமும் உடல் எடை குறைப்பது தொடர்பான பட்டியலை எழுதி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தப்பட்டதில் உடல் பருமனாக இருப்பதால் தொடர்ந்து மனரீதியாக அவர் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.